கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி: இ.பி.எஸ்.,

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை. அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளன. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.