கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும்.

கொரோனா தடுப்பு பணி தமிழகத்தில் முழு வீச்சில் நடைபெறுகிறது. கொரோனாவால் தமிழகத்தில் ஒரு உயிரை கூட இழக்க அரசு அனுமதிக்காது. பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக விமான நிலையங்களில் 2,05,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 198 பேர் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 54 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் முழு அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்களை தமிழக அரசு சார்பில் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.